எழிலோடு விளங்கும் எங்கள் வித்தியாலயம் - நல்ல
எதிர்காலம் உருவாக்கும் அறிவின் ஆலயம் விவேகானந்தர் காட்டும்
அன்பு நெறியில் நின்று விளங்கும் விவேகானந்தா தமிழ் வித்தியாலயம்
(எழிலோடு)
ஏற்றமிகு கல்வியே எம்மை உயர்த்தும் எந்நாளும் உழைத்திடு
நன்மை பிறக்கும்;. கல்வியை கண்ணென கற்று நாமும் - நல்ல
கனிவோடும் பணிவோடும் பண்புடன் வாழ்வோம்
(எழிலோடு)
அறிவைத் தரும் நல்ல ஆசான்களை நாமும் அவணியிலே போற்றி
புகழ்ந்திடுவோம். செய்யும் செயலை சிரமேற் கொண்டு சிறப்புடன்
வாழ்ந்தே உயர்திடுவோம்
(எழிலோடு)
விவேகானந்தா தமிழ் வித்தியாலயம்
விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் ( II)