
திரு. எஸ் .சுப்ரமணியம் (முன்னால் அதிபர்)
எமது பிரதேசத்திற்கென தழிழ் பாடசாலையொன்று இல்லா நிலையில் மாணவர்களும் , பெற்றோர்களும் பெரும் அசௌகரியங்களை சந்தித்துவந்த நிலையில் இவரின் அயராத முயற்சியின் பயனாகவே தமிழ் மாணவர்களுக்கென தனியானதொரு பாடசாலையாக இப் பாடசாலை உருவாக்கம் பெற்றது. தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான இரண்டு எக்கர் தேயிலைக் காணி பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பெறப்பட்டு (100X20) என்ற ஒரு கட்டிடத்தில் சுமார் 100 மாணவர்களுடன் 1994ம் ஆண்டு அட்டாம்பிடிய தமிழ் வித்தியாலயம் என்ற பெயரில் இப் பாடசாலை உருவாக்கப்பட்டது.